அமெரிக்க தேர்தலில் ரஷிய தலையீடு விவகாரம்: விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தார் முல்லர்

கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்ப்புக்கு ஆதரவாக ரஷியா தலையீடு செய்ததாகக் கூறப்படுவது குறித்த விசாரணை அறிக்கையை, சிறப்பு விசாரணை அதிகாரி ராபர்ட் முல்லர் நீதித்

கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்ப்புக்கு ஆதரவாக ரஷியா தலையீடு செய்ததாகக் கூறப்படுவது குறித்த விசாரணை அறிக்கையை, சிறப்பு விசாரணை அதிகாரி ராபர்ட் முல்லர் நீதித் துறையிடம் சமர்ப்பித்துள்ளார்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின்போது, குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறும் வகையில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனின் மின்னஞ்சல் மற்றும் பிரசார அலுவலக கணினிகளில் இணையதளம் மூலம் ரஷியா ஊடுருவியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. மேலும், அமெரிக்க வாக்காளர்களிடையே ஹிலாரிக்கு எதிரான கருத்துகளை உருவாக்க, சமூக வலைதளங்களில் ரஷியர்கள் ஊடுருவி பதிவுகளை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் டிரம்ப்பின் பிரசாரக் குழுவுக்கும், ரஷிய அதிகாரிகளுக்கும் இடையே ரகசிய கூட்டு இருந்ததாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
இதுதொடர்பாக, புலனாய்வுத் துறையின் (எஃப்.பி.ஐ.) முன்னாள் இயக்குநரும், வெள்ளை மாளிகை சிறப்பு விசாரணை அதிகாரியுமான ராபர்ட் முல்லரின் தலைமையில் விசாரணை நடைபெற்று வந்தது.
அந்த விசாரணையில், 3 நிறுவனங்கள், 34 நபர்கள் மீது கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டது. அதில் 7 பேர் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்; ஒருவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், டிரம்ப் அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வந்த இந்த விசாரணையை நிறைவு செய்துள்ள ராபர்ட் முல்லர், விசாரணை அறிக்கையை நீதித் துறையிடம் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.
எனினும், அந்த அறிக்கையில் கூடுதலாக யார் மீதும் அவர் குற்றம் சாட்டவில்லை. அந்த அறிக்கை மீதான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நீதித் துறை பரிசீலித்து வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com