வட கொரியா மீதான பொருளாதாரத் தடைகள்: டிரம்ப் திடீர் வாபஸ்

வட கொரியா மீது அமெரிக்க நிதியமைச்சகம் அறிவித்த கூடுதல் பொருளாதாரத் தடைகளை அதிபர் டொனால்ட் டிரம்ப் உடனடியாக வாபஸ் பெற உத்தரவிட்டார்.

வட கொரியா மீது அமெரிக்க நிதியமைச்சகம் அறிவித்த கூடுதல் பொருளாதாரத் தடைகளை அதிபர் டொனால்ட் டிரம்ப் உடனடியாக வாபஸ் பெற உத்தரவிட்டார்.
வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னை அதிபர் டிரம்ப்புக்கு "பிடித்துள்ளதால்' இதுபோன்ற பொருளாதாரத் தடைகள் தேவையில்லை என்று அவர் கூறிவிட்டதாக அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள சுட்டுரை (டுவிட்டர்) பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வட கொரியா மீது தற்போது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளுடன் கூடுதலாக மேலும் சில பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று நிதியமைச்சகம் அறிவித்தது. அந்த அறிவிப்பை வாபஸ் பெறுமாறு நான் உத்தரவிட்டுள்ளேன் என்று தனது சுட்டுரைப் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, வட கொரியாவுடன் வர்த்தகம் செய்து வரும் சீனாவைச் சேர்ந்த 2 கப்பல் நிறுவனங்களுக்குத் தடை விதிக்கும் அறிவிப்பை அமெரிக்க நிதியமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டது.
அந்த அறிவிப்பை வெளியிட்டு நிதியமைச்சர் ஸ்டீவன் நுசின் கூறியதாவது: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின் அடிப்படையில், அணு ஆயுதங்களைக் கைவிட வட கொரியாவுக்கு நிர்பந்தம் கொடுக்க வேண்டும் என்பதில் அமெரிக்காவும், நட்பு நாடுகளும் உறுதியாக உள்ளன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com