Enable Javscript for better performance
தேர்தல் என்பதால் இந்தியா மீண்டும் தாக்கும்: இம்ரான் கான் கண்டுபிடிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தேர்தல் என்பதால் இந்தியா மீண்டும் தாக்கும்: இம்ரான் கான் கண்டுபிடிப்பு

    By DIN  |   Published on : 27th March 2019 04:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    imran

     

    மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் பாகிஸ்தான் மீது இந்தியா மீண்டும் தாக்கும் என இம்ரான் கான் கண்டுபிடித்துள்ளார்.

    இதுதொடர்பாக நியூஸ் இன்டர்நேஷனல் என்ற ஊடகம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது. அதில்,

    இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் என்று எனது உள்ளுணர்வு கூறுகிறது.

    இதேபோன்று மீண்டும் ஒரு தாக்குதல் சம்பவம் நடத்த வாய்ப்புள்ளது. ஏனென்றால் புல்வாமா சம்பவம் நடந்தபோது அதை மையமாக வைத்து, நரேந்திர மோடியின் அரசு போர் நிலையை ஏற்படுத்த முயற்சித்தது. 

    தேர்தலில் வெற்றிபெற மட்டுமே இதையெல்லாம் மோடி அரசு செய்கிறது. மற்றபடி இருநாட்டு பிரச்னைகளுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும், தொடர்பும் இல்லை என்பதை இந்திய மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

    அதிலும் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இருநாடுகளின் உறவு மிக மோசமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai