Enable Javscript for better performance
ஒவ்வொரு நாடும் அமைதியை கடைப்பிடிக்கும்: சீனா நம்பிக்கை- Dinamani

சுடச்சுட

    

    ஒவ்வொரு நாடும் அமைதியை கடைப்பிடிக்கும்: சீனா நம்பிக்கை

    By DIN  |   Published on : 28th March 2019 01:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையை, இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ள நிலையில், விண்வெளியில் ஒவ்வொரு நாடும் அமைதியையும், சமாதானத்தையும் கடைப்பிடிக்கும் என்று நம்புவதாக சீனா தெரிவித்துள்ளது.
    இந்தியாவின் செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை குறித்து பிடிஐ செய்தி நிறுவனம் எழுப்பிய கேள்விக்கு, சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், இந்த செய்திகள் எங்களுக்கு தெரியவந்தன. விண்வெளியில் ஒவ்வொரு நாடும் அமைதியையும், சமாதானத்தையும் கடைப்பிடிக்கும் என்று நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது.
    முன்னதாக, செயற்கைகோளை தாக்கி அழிக்கும் ஏவுகணையை கடந்த 2007-ஆம் ஆண்டில் சீனா சோதனை செய்தது. தங்கள் நாட்டின் செயல்திறன் நிறைவுற்ற செயற்கைகோள் ஒன்றை ஏவுகணை மூலமாக சீனா வீழ்த்தியது.
    பாகிஸ்தான் கருத்து: செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனையை மேற்கொள்வது விண்வெளிப் பகுதியை ராணுவமயமாக்குவதற்கு வழிவகுக்கும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஆனால், இந்தியாவின் பெயரை அவர்கள் நேரடியாகக் குறிப்பிடவில்லை.
    இதுதொடர்பாக, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
    விண்வெளி என்பது மனிதகுலத்துக்கான பொதுவான தளம் ஆகும். அதை ராணுவமயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்; ஒவ்வொரு நாட்டுக்கும் அதற்கான பொறுப்பு இருக்கிறது. விண்வெளியில் ஆயுதப் போட்டியை தடை செய்வதற்கான ஐ.நா.வின் தீர்மானத்துக்கு பலமான ஆதரவாளராக பாகிஸ்தான் இருக்கிறது. 
    செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை, இதற்கு முன் சோதனை செய்யப்பட்ட தருணங்களில், அதை வன்மையாகக் கண்டித்த நாடுகள், தற்போது விண்வெளி தளத்திற்கு ஏற்படக் கூடிய ராணுவ அச்சுறுத்தலை  தடுத்து நிறுத்துவதற்கான சர்வதேச நெறிமுறைகளை முன்னெடுக்கும் என்று நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai