Enable Javscript for better performance
நவாஸ் ஷெரீஃப் ஜாமீனில் விடுதலை- Dinamani

சுடச்சுட

    
    nawas

    லாகூர் சிறையில் இருந்து புதன்கிழமை காரில் வெளியேறும் நவாஸ் ஷெரீஃப்.


    ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் முஸ்லிம் லீக்- நவாஸ் கட்சியின் நிறுவனரும், அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீஃப், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
    அல்-அஜீஸியா இரும்பாலை ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நவாஸ், லாகூரின் கோட் லக்பத் சிறையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு இருதய நோய் பாதிப்பின் தாக்கம் அதிகமானதால், சிறை வளாகத்திலேயே மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன.
    நவாஸின் மகள் மரியம் நவாஸ் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், கடந்த வாரம் சிறைக்குள் சென்று, நவாஸைச் சந்தித்துப் பேசினர். இதையடுத்து, அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் கவலை தெரிவித்தனர். பின்னர், நவாஸுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக, கூடுதல் தலைமைச் செயலருக்கு மரியம் நவாஸ் கடிதம் எழுதியிருந்தார்.
    இந்நிலையில், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக ஜாமீன் கோரி, நவாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம், நவாஸுக்கு 6 வாரங்கள் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. நாட்டுக்குள் உள்ள எந்த மருத்துவமனையில் வேண்டுமானாலும், அவரின் விருப்பப்படி சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 
    இதைத் தொடர்ந்து, நவாஸ் புதன்கிழமை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சிறை வளாகத்துக்கு வெளியே காத்திருந்த அவரது தொண்டர்கள், நவாஸ் இருந்த கார் மீது பூக்களை வீசி, அவருக்கு வரவேற்பு அளித்தனர். பின்னர், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவரும், நவாஸின் சகோதரருமான ஷாபாஸ் ஷெரீஃப், அந்நாட்டு உச்சநீதிமன்றத்துக்கும், நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai