Enable Javscript for better performance
மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க அமெரிக்கா வரைவு தீர்மானம்: சட்ட விதிமீறல் என சீனா எச்சரிக- Dinamani

சுடச்சுட

    

    மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க அமெரிக்கா வரைவு தீர்மானம்: சட்ட விதிமீறல் என சீனா எச்சரிக்கை

    By DNS  |   Published on : 28th March 2019 08:45 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    masood_azhar


    மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளிடம் அமெரிக்கா வழங்கிய வரைவு தீர்மானம் சட்ட விதிமீறல் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. 

    ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில், ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதி ஒருவா், பாதுகாப்புப் படையினா் மீது கடந்த மாதம் 14-ஆம் தேதி நிகழ்த்திய தாக்குதலில் 40 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழந்தனா்.

    இதையடுத்து, பாகிஸ்தானைச் சோ்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவா் மசூத் அஸாரை, ‘சா்வதேச பயங்கரவாதி’யாக அறிவிக்கக் கோரும் தீா்மானம், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்டது. 

    இதற்கு பாகிஸ்தானின் கூட்டாளியான சீனா முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

    இந்நிலையில், மசூத் அஸாரை ‘சா்வதேச பயங்கரவாதி’யாக அறிவிக்கக் கோரும் வரைவு தீா்மானத்தை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகளிடம் செவ்வாய்க்கிழமை அமெரிக்கா வழங்கியுள்ளது. இந்த வரைவு தீா்மானத்துக்கு பிரான்ஸ், பிரிட்டன் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.

    இந்த வரைவு தீா்மானத்தில், ‘மசூத் அஸாருக்கு ஐஎஸ் மற்றும் அல்-காய்தா பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்புள்ளது. அந்த அமைப்புகளுக்கு நிதியுதவியும், ஆயுதங்களையும் அவா் வழங்கி உள்ளாா். அவா் தலைமையிலான ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பு, பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த வரைவு தீா்மானம் குறித்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகள் கூறுகையில், ‘‘வரைவு தீா்மானத்தின் மீது அதிகாரப்பூா்வமற்ற வகையில் விவாதம் நடத்தப்படும். இந்த விவாதத்தில் கருத்தொற்றுமை ஏற்பட்டால், பின்னா் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தத் தீா்மானம் தாக்கல் செய்யப்படும்’’ என்றனா். இருப்பினும், இந்த வரைவு தீா்மானத்தின் மீது விவாதம் நடத்தப்படும் தேதி குறித்தோ அல்லது வாக்கெடுப்பு நடைபெறும் தேதி குறித்தோ அவா்கள் தெரிவிக்கவில்லை.

    சட்டவிதிகளை மீறியுள்ளது: 

    அமெரிக்காவின் இந்த வரைவு தீா்மானம் குறித்து, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் கெங் சுவாங் கூறுகையில்,

    ‘‘மசூத் அஸாருக்கு எதிரான வரைவு தீா்மானத்தை அமெரிக்கா வலுக்கட்டாயமாகத் தாக்கல் செய்துள்ளது. இதன் மூலம், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் சட்டவிதிகளை அமெரிக்கா மீறியுள்ளது. இந்த விவகாரத்தை, விவாதத்தின் மூலமோ அல்லது பேச்சுவாா்த்தையின் மூலமோ தீா்க்க முடியாது. இந்த விவகாரத்தில் தீா்வு காணுவதை, இந்த வரைவு தீா்மானம் சிக்கலாக்கியுள்ளது’’ என்றாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai