Enable Javscript for better performance
யேமன் மருத்துவமனையில் குண்டுவீச்சு: 7 பேர் பலி- Dinamani

சுடச்சுட

    


    யேமன் மருத்துவமனையில் நிகழ்த்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர்.
    இதுகுறித்து சேவ் தி சில்ட்ரன் அமைப்பு தெரிவித்துள்ளதாவது:
    யேமனின் வட மேற்குப் பகுதியில் சாடா நகருக்கு 100 கி.மீ. தொலைவில் உள்ள ரிடால்ஃப் கிராமப்புற மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு போர் விமானம் வீசிய குண்டு விழுந்து வெடித்தது.
    காலை நேரத்தில் அந்த மருத்துவமனைக்கு ஊழியர்களும், நோயாளிகளும் அதிக அளவில் வந்து கொண்டிருந்தபோது, மருத்துவமனையின் முக்கிய கட்டடத்துக்கு 50 மீட்டர் தொலைவில் அந்த குண்டு விழுந்து வெடித்தது. 
    இந்தத் தாக்குதலில் 4 சிறுவர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்; 8 பேர் காயமடைந்தனர்.
    உயிரிழந்தவர்களில் மருத்துவப் பணியாளர்களும், அவர்களது 2 குழந்தைகள் மற்றும் மருத்துவமனை காவலாளியும் அடங்குவர் என்று அந்தத் தொண்டு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai