Enable Javscript for better performance
வெனிசூலாவில் ரஷிய ராணுவம்- Dinamani

சுடச்சுட

    


    வெனிசூலாவில் அதிபர் நிக்கோலஸ் மடூரோவுக்கு ஆதரவாக ரஷிய ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதை அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
    இதுகுறித்து ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஸாக்கரோவா செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
    அரசியல் பதற்றம் நிலவி வரும் வெனிசூலாவை, ரஷியப் படையினர் கடந்த வார இறுதியில் சென்றடைந்தனர்.
    வெனிசூலா அரசின் அழைப்பை ஏற்று அங்கு சென்றுள்ள ரஷியப் படையினருக்கு, அந்த நாட்டில் இருப்பதற்கான முழு உரிமையும் உள்ளது. வெனிசூலாவின் அரசியல் சாசனத்துக்கு உள்பட்டு, இரு நாட்டு ராணுவ ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக ரஷிய ராணுவ வீரர்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
    எனினும், வெனிசூலாவுக்கு எத்தனை வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai