ராணுவப் புரட்சிக்குத் தூண்டுதல்: குவாய்டோ மீது வெனிசூலா அரசு குற்றச்சாட்டு

வெனிசூலாவில் அதிபர் நிக்கோலஸ் மடூரோவின் ஆட்சியைக் கவிழ்க்க ராணுவப்  புரட்சியைத் தூண்டி விடுவதாக, எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவாய்டோ மீது அந்த நாட்டு அரசு புதிய குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.


வெனிசூலாவில் அதிபர் நிக்கோலஸ் மடூரோவின் ஆட்சியைக் கவிழ்க்க ராணுவப்  புரட்சியைத் தூண்டி விடுவதாக, எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவாய்டோ மீது அந்த நாட்டு அரசு புதிய குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.
மடூரோவுக்கு எதிரான போராட்டத்தில் ராணுவத்தினர் இணைந்துள்ளதாக ஜுவான் குவாய்டோ செவ்வாய்க்கிழமை அறிவித்ததைத் தொடர்ந்து, அரசு இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.
இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் ரோட்ரிகஸ் கூறியுள்ளதாவது: ராணுவத்தின் சிறிய குழு ஒன்று, அரசைக் கவிழ்க்கும் முயற்சியாக கராகஸ் நகரிலுள்ள அல்டாமிரா சாலையை ஆக்கிரமித்துள்ளது. வீரமும், கௌரவமும் மிக்க வெனிசூலா ராணுவத்துடன இணைந்து, பொதுமக்கள் அந்த முயற்சியை முறியடிக்க வேண்டும் என்று அந்த சுட்டுரைப் பதிவில் ஜார்ஜ் ரோட்ரிகஸ் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, சமூக வலைதளங்களில் குவாய்டோ வெளியிட்ட விடியோ பதிவில், கராகஸ் ராணுவ தளத்திலிருந்தபடி அரசியல் சாசனத்தைக் காக்க வேண்டும் என்ற எனது கோரிக்கையை தேசப் பற்றும், வீரமும் மிக்க நமது வீரர்கள், ஏற்றுக் கொண்டார்கள் என்று தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாகவே, ரோட்ரிகஸ் இவ்வாறு கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com