ரஷியத் தலையீடு குறித்த விசாரணை: அட்டர்னி ஜெனரல் மீது முல்லர் குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியத் தலையீடு குறித்த தனது விசாரணை அறிக்கைக்கு, அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார் தவறான அர்த்தம் கற்பித்துள்ளதாக, சிறப்பு விசாரணை அதிகாரி ராபர்ட் முல்லர்
ரஷியத் தலையீடு குறித்த விசாரணை: அட்டர்னி ஜெனரல் மீது முல்லர் குற்றச்சாட்டு


அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியத் தலையீடு குறித்த தனது விசாரணை அறிக்கைக்கு, அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார் தவறான அர்த்தம் கற்பித்துள்ளதாக, சிறப்பு விசாரணை அதிகாரி ராபர்ட் முல்லர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து வாஷிங்டன் போஸ்ட் நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், எனது விசாரணை அறிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் வில்லியம் பார் அளித்துள்ள குறிப்பு, தவறான அர்த்தத்தை கற்பித்துள்ளது. அதன் மூலம், இந்த விவகாரத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றமற்றவர் என்ற தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினர்.
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரஷியா தலையிட்டது உண்மைதான் எனினும், இந்த விவகாரத்தில் ரஷியாவுக்கும், டிரம்ப்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை எனவும் முல்லரின் விசாரணை அறிக்கை தெரிவிப்பதாக நாடாளுமன்றத்திடம் அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார் அளித்துள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com