மதநிந்தனை குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பு: கனடா சென்று சேர்ந்த பாகிஸ்தானிய கிறிஸ்துவ பெண் 

மதநிந்தனை குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட பாகிஸ்தானிய கிறிஸ்துவ பெண்ணான ஆசியா பீபீ, தனது கணவருடன் கனடா சென்று சேர்ந்தார்.
மதநிந்தனை குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பு: கனடா சென்று சேர்ந்த பாகிஸ்தானிய கிறிஸ்துவ பெண் 

இஸ்லாமாபாத்: மதநிந்தனை குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட பாகிஸ்தானிய கிறிஸ்துவ பெண்ணான ஆசியா பீபீ, தனது கணவருடன் கனடா சென்று சேர்ந்தார்.

பாகிஸ்தானில் வசித்து வரும் கிறிஸ்தவப் பெண்ணான ஆசியா பீபி, முஸ்லிம் மதத்தை அவமதித்ததாக, கடந்த 2009-ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு, சிறப்பு நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. இந்தத் தீர்ப்பை லாகூர் உயர்நீதிமன்றம் கடந்த 2014-ஆம் ஆண்டு உறுதி செய்தது.

மரண தண்டனைக்கு எதிராக, பீபியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த அந்நாட்டு உச்சநீதிமன்றம், இந்த வழக்கிலிருந்து ஆசியா பீபியை விடுவித்து கடந்த அக்டோபர் மாதம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து, தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, முகமது சலாம் என்பவர் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆசிப் சயீது கோசா தலைமையிலான அமர்வு முன்பு கடந்த ஜனவரி 29-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது நீதிபதிகள்  'சாட்சியங்களை அடிப்படையாக வைத்தே ஆசியா பீபி விடுவிக்கப்பட்டார். சாட்சியங்களில் தவறு நிகழ்ந்திருந்தால், தீர்ப்பை மறுஆய்வு செய்ய பரிசீலனை செய்யப்படும். மதத்துக்கும் தீர்ப்புக்கும் என்ன தொடர்பு உள்ளது? குற்றமற்றவருக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என முஸ்லிம் மதம் கூறுகிறதா?'' என்று கேள்வி எழுப்பி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

இந்நிலையில் மதநிந்தனை குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட பாகிஸ்தானிய கிறிஸ்துவ பெண்ணான ஆசியா பீபீ, தனது கணவருடன் கனடா சென்று சேர்ந்தார்.

இதுதொடர்பாக அந்தப் பெண்ணின் வழக்கறிஞரான சைப் உல் மலூக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆசியா பீபீ செவ்வாய் இரவு கண்டா சென்று சேர்ந்தார். பாகிஸ்தான் அரசாங்கமானது அவர் நாட்டை விட்டு வெளியேற அனுமதி அளித்த பிறகு, அவர் தனது கணவருடன் செவ்வாய் அன்று புறப்பட்டார். அவர் வெளியேற அனுமதிக்கப்படுவது பல்வேறு அரசாங்க நடைமுறைகளின் காரணமாக தாமதமானாலும், இறுதியாக அவர் பாதுகாப்பாக வெளியேறி விட்டார். இறைவனுக்கு நன்றி!

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதே தகவலை பாகிஸ்தான் அரசு அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com