ஆப்பிளுக்கும் ஆண்ட்ராய்ட்டுக்கும் என்ன சர்ச்சை? கூகுளின் சுந்தர் பிச்சை விளக்கம்!

கூகுள் நிறுவனத்தின் செயலிகள் பலவும் அனைவருக்கும் உதவும் விதமாக உருவாக்கப்பட்டது.
ஆப்பிளுக்கும் ஆண்ட்ராய்ட்டுக்கும் என்ன சர்ச்சை? கூகுளின் சுந்தர் பிச்சை விளக்கம்!

கூகுள் நிறுவனத்தின் செயலிகள் பலவும் அனைவருக்கும் உதவும் விதமாக உருவாக்கப்பட்டது. அன்றாடம் நான் பயன்படுத்தும் க்ரோம், கூகுள் மேப் மற்றும் ஆண்ட்ராய்டு உள்ளிட்ட பலவும், நம் வேலைகளுக்கு பெரிதும் உதவுபவை. இந்த நவீன உலகம் ஆண்ட்ராய்ட் மயமானது என்பது தொழில்நுட்பம் புரிந்தவர்கள் மட்டுமல்ல அனைவருக்குமே உணரும் விஷயம்தான். ஆனால் ஆனால் பல நேரங்களில் ஆண்ட்ராய்டில் பாதுகாப்பின்மை பிரச்னை எழுந்துள்ளனது. தகவல்கள் திருடப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்கு பதில் அளிக்கும்விதமாக அண்மையில் கூகுள் நிறுவனம் சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தங்களின் வருங்கால திட்டங்களை ஒழுங்கமைக்க கூகுள் நிறுவனம் தங்களுடைய செயல் திட்டங்களை வடிவமைக்கும். 2019-ம் ஆண்டுக்கான திட்டங்களை அறிவிக்கும் கூட்டம் ஒன்று அண்மையில் நடைபெற்றது. இதில் பேசிய  கூகுள் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சை, கூகுள் வலைதளத்தைப் பயன்படுத்துவோர் குறித்த தகவல்கள், 3-ஆவது நபர்களுக்கு விற்கப்படுவதில்லை என்றும், பணம் படைத்தவருக்கு மட்டும்தான் பாதுகாப்பா எனவும் ஆப்பிள் நிறுவனத்தை தாக்கிப் பேசினார். இது குறித்து தனது கருத்துக்களைத் தொடர்ந்து பதிவு செய்தும் வருகிறார் சுந்தர் பிச்சை.

'இணையதளத்தை பயன்படுத்துவோரின் ரகசியங்கள் பாதுகாக்கப்படுவது தற்போதைய சூழலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் ஆகும்.
எனினும், தனிநபர் ரகசியப் பாதுகாப்பு உரிமை என்பதை அவரவர் தங்களது விருப்பம் போல் வரையறை செய்து கொள்கின்றனர். கூகுள் நிறுவனத்தைப் பொருத்தவரை, இது குறித்து மிகத் தெளிவான, அர்த்தமுள்ள கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. எங்களது இணையதள சேவைகளைப் பயன்படுத்துவோர் குறித்த தகவல்களை ஒருபோதும் நாங்கள் விற்பனை செய்வதில்லை.

மேலும், பாதுகாப்பு என்பது அனைவருக்கும் கிடைக்க வேண்டிய ஒரு அத்யாவசியமான விஷயம். இது ஆடம்பர பொருட்களை வாங்கிக் குவிக்கும் பணம் படைத்தவர்களுக்கு மட்டும் உரியதல்ல. நான் உலகில் அனேக நாடுகளில் உள்ள பலவிதமான மக்களுடன் தொடர்ந்து பேசி வருகிறேன். ஒவ்வொரு நாட்டிலும் தனி நபர் உரிமைகள் மாறுபட்டு உள்ளன. ஆனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் தங்கள் குறித்த தகவல்கள் பகிரப்படுவது குறித்து விழிப்புணர்வுடன் தான் உள்ளார்கள். கூகுள் நிறுவனம் அனைத்து மக்களுக்குமான தனி மனித உரிமையையும், தகவல் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி உள்ளது’ என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com