வடகொரிய அணுஆயுதச் சோதனைகளுக்கு அமெரிக்கா புது விளக்கம்!

அணு ஆயுதங்களைக் கைவிடுவதாக வட கொரிய அதிபர் கடந்த ஆண்டு அறிவித்ததற்குப் பிறகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
வடகொரிய அணுஆயுதச் சோதனைகளுக்கு அமெரிக்கா புது விளக்கம்!

அணு ஆயுதங்களைக் கைவிடுவதாக வட கொரிய அதிபர் கடந்த ஆண்டு அறிவித்ததற்குப் பிறகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏவுகணை சோதனைகள் மற்றும் ராணுவ ஒத்திகைகளை அந்த நாடு மீண்டும் தொடங்கியுள்ளதால் பிராந்தியப் பதற்றம் அதிகரித்துள்ளது. 

இதையடுத்து, வட கொரியா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை மீறிய அந்த நாட்டு சரக்குக் கப்பலை சிறைபிடித்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. வட கொரியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடை விவகாரத்தில், அந்த நாட்டுடன் இதுபோன்ற நேரடி மோதலில் அமெரிக்கா ஈடுபடுவது இதுவே முதல் முறையாகும்.

இந்நிலையில், வட கொரியாவின் இந்த ஏவுகணை சோதனைகள் மற்றும் ராணுவ ஒத்திகைகள் ஆகியவை நம்பகத்தன்மைக்கு எதிரான செயல் கிடையாது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சனிக்கிழமை தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com