சுடச்சுட

  

  சிறைபிடிக்கப்பட்ட கப்பலை அமெரிக்கா விடுவிக்க வேண்டும்

  By DIN  |   Published on : 15th May 2019 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ship


  சிறைபிடித்துள்ள தங்களது சரக்குக் கப்பலை அமெரிக்கா உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வட கொரியா வலியுறுத்தியுள்ளது.
  இதுகுறித்து வட கொரிய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடையைக் காரணம் காட்டி, வட கொரியாவின் சரக்குக் கப்பலை அமெரிக்கா சிறைபிடித்துள்ளது.
  இது, சட்டவிரோதமான நடவடிக்கையாகும்.
  மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னும் சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மேற்கொண்ட ஒப்பந்தத்துக்கு இது எதிரானதாகும் என்றார் அவர்.
  பொருளாதாரத் தடையை மீறியதற்காக கடந்த ஆண்டு ஏப்ரம் மாதமே இந்தோனேஷிய துறைமுகத்தில் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த வட கொரியாவின் வைஸ் ஹானஸ்ட் சரக்குக் கப்பலை சிறைபிடித்ததாக, அமெரிக்கா கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.
  வட கொரியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடை விவகாரத்தில், அந்த நாட்டுடன் இதுபோன்ற நேரடி மோதலில் அமெரிக்கா ஈடுபடுவது இதுவே முதல் முறையாகும்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai