பிற  நாகரிகங்களுடன் இணைந்து வளர்ச்சி நிலையை உருவாக்க வேண்டும்: ஷி ஜின்பிங்

சீன அதிபர் ஷி ஜின்பிங் புதன் கிழமை நடைபெற்ற ஆசிய நாகரிகங்களுக்கு இடையிலான உரையாடல் மாநாட்டில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். 
பிற  நாகரிகங்களுடன் இணைந்து வளர்ச்சி நிலையை உருவாக்க வேண்டும்: ஷி ஜின்பிங்

சீன அதிபர் ஷி ஜின்பிங் புதன் கிழமை நடைபெற்ற ஆசிய நாகரிகங்களுக்கு இடையிலான உரையாடல் மாநாட்டில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:- 

உலகம் மற்றும் ஆசிய நாகரீகங்களில் ஒன்றாக சீன நாகரிகமும் திகழ்கிறது. பண்டைக்காலம் தொட்டு, தொடர்ந்து வளர்ந்து வரும் சீன நாகரிகம். சீனத் தேசிய எழுச்சியை வெளிக் கொண்டு வருகிறது.

மேலும், பல்வேறு நாகரிகங்களுடன் இணைந்து இணக்கமாக வாழ்வதற்கு அழைப்பு விடுத்தார். பிற நாகரிகங்களை அதன் இயல்பன துடிப்பு மாறாமல் பேணிக்காப்பதோடு, வளர்ச்சி நிலைகளை உருவாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். பொது அறை கூவல்களைச் சமாளிப்பதில், பொருளாதாரம் மற்றும் அறிவியல் தொழில் நுட்ப ஆற்றல் மட்டுமல்லாது, பண்பாடு மற்றும் நாகரிக ஆற்றலும் மனித குலத்துக்குத் தேவைப்படுகிறது.

ஆசியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளின் நாகரிகங்கள், ஒன்றுக்கொன்று பரிமாற்றம் செய்து, கற்றுக்கொள்வதற்கு உரிய புதிய மேடையை இம்மாநாடு வழங்குகிறது. உலகின் பல்வேறு நாகரிகங்களை முழுமையாக மலர விட வேண்டும். நாகரிகங்களைப் பற்றியும் அதன் அழகையும் மக்கள் புரிந்து கொள்ளும் வரை எந்த மோதலும் இல்லை.

ஆசிய மக்கள் திறந்த மற்றும் ஒருங்கிணைந்த ஆசியாவை எதிர்பார்க்கிறார்கள். ஆசியாவின் பல்வேறு நாடுகளும் ஒன்றுக்கொன்று மதிப்பு அளித்து, கூட்டு மனப்பான்மையுடன் சுமுகமாக வாழ்ந்து, பொருளாதார உலகமயமாக்கத்தைத் தூண்ட வேண்டும். உலகின் மற்றப் பகுதிகளில் இருந்து நாடுகள் தங்களை விலக்கிக் கொண்டு தனிமைப் படுத்திக் கொண்டால் நாகரிகங்கள் உயிரிழந்துவிடும். 

நாகரிகங்களில் பரஸ்பர மரியாதை மற்றும் சமமான அணுகுமுறையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டி உலகின் பல்வேறு நாடுகள், தேசிய இனங்கள், பண்பாடுகள் பரிமாற்றம் மேற்கொண்டு, ஒன்றிடமிருந்து மற்றொன்று கற்றுக்கொண்டு, ஆசிய பொது சமூகம், மனிதக் குலத்தின் பொது சமூகம் முதலியவற்றுக்குரிய பண்பாட்டு அடிப்படையை வலுப்படுத்த வேண்டும். பன்முகத் தன்மையின் வழி, நாகரிகத்தைப் பரிமாறிகொண்டு, அதன் மூலம் நாகரிக வளர்ச்சி அடையலாம்.

இவ்வாறு சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com