அமெரிக்கா: கருக்கலைப்புத் தடை மசோதா: அலபாமா பேரவையில் நிறைவேற்றம்

கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் சர்ச்சைக்குரிய மசோதா, அமெரிக்காவின் அலபாமா  மாகாண பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கருக்கலைப்புத் தடைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அலபாமா மாகாண பேரவை எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மனித உரிமை ஆர்வலர்கள்.
கருக்கலைப்புத் தடைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அலபாமா மாகாண பேரவை எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மனித உரிமை ஆர்வலர்கள்.


கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் சர்ச்சைக்குரிய மசோதா, அமெரிக்காவின் அலபாமா  மாகாண பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தச் சட்ட மசோதாவில், பாலியல் பலாத்காரம் போன்ற காரணங்களால் கர்ப்பமடைந்த பெண்களுக்குக் கூட கருக்கலைப்புத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்படாதது குறிப்பிடத்தக்கது. குடியரசுக் கட்சியினர் ஆதிக்கம் நிறைந்த மாகாணப் பேரவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு, மனித உரிமை ஆர்வலர்களும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த சட்ட மசோதாவின்படி, கருக்கலைப்பு செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்; அந்தக் குற்றத்துக்கு 10 முதல் 99 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும். கர்ப்பிணியின் உயிருக்கு ஆபத்து இருந்தாலும், கருவிலிருக்கும் சிசு இறந்துபோனாலும் மட்டுமே கருக்கலைப்பு செய்யலாம். மற்றபடி, பாலியல் பலாத்காரத்துக்கு உள்படுத்தப்பட்ட பெண்கள், நெருங்கிய உறவினரர்களால் ஏமாற்றப்பட்ட பெண்களுக்குக் கூட இந்தச் சட்டத்தில் விதிவிலக்கு அளிக்கப்படாதது  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com