ரஷியாவில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்

ரஷியாவில் ஒரு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ, சிரியா, வட கொரியா உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
சோச்சி நகரில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ.

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் ஆகியோருடன் பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு புறப்படும்போது, விமான நிலையத்தில் அவர் செவ்வாய்க்கிழமை இரவு கூறியதாவது: சிரியா விவகாரம் குறித்து ரஷிய அதிபருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமைந்திருந்தது.
உள்நாட்டுப் போர் முடிவுக்குப் பிந்தைய சிரியாவின் எதிர்காலம் குறித்து இருவரும் விவாதித்தோம். அந்த விவகாரத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்படக்கூடிய அம்சங்கள் குறித்தும் ஆலோசித்தோம்.
வட கொரியா விவகாரத்தில், நாங்கள் இருவரும் ஒருமித்த கருத்தைப் பகிர்ந்து கொண்டோம் என்றார் பாம்பேயோ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com