சுடச்சுட

  

  ஒரு பாலின திருமணச் சட்டத்தை நிறைவேற்றியது தைவான்: ஆசியாவில் இதுவே முதன்முறை

  By DIN  |   Published on : 17th May 2019 06:46 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Taiwan_same_sex_marriage


  ஆசியாவின் முதல் நாடாக ஒரு பாலின திருமணத்தை தைவான் நாடு சட்டப்பூர்வமாக்கியுள்ளது.

  ஒரு பாலின திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது தைவான் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மே 24 ஆம் தேதிக்குள் இதுதொடர்பாக சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் நீதிமன்றம் கெடு விதித்திருந்தது. 

  இந்த நிலையில், இதுதொடர்பான வாக்கெடுப்பு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதற்காக ஒரு பாலின ஈர்ப்பு ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கொட்டும் மழையிலும் நாடாளுமன்றம் முன் கூடினர்.

  இதையடுத்து, ஒரு பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும் மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்றம் நிறைவேற்றியது. இந்த சட்டம் நிறைவேற்றியதன் மூலம், அந்நாட்டின் அரசுத் துறைகளில் ஒரு பாலின திருமணத்தை வரும் காலங்களில் பதிவு செய்து கொள்ளலாம். 

  இதன்மூலம், ஒரு பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்துள்ள முதல் ஆசிய நாடு என்ற பெருமையை தைவான் பெற்றுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai