அமெரிக்கா: கிடங்கில் விழுந்து நொறுங்கிய எஃப்-16 விமானம்

அமெரிக்காவில், பயிற்சியில் ஈடுபட்டிருந்த எஃப்-16 ரக போர் விமானம், கிடங்கு ஒன்றில் விழுந்து நொறுங்கியது. எனினும், அதிலிருந்த
அமெரிக்கா: கிடங்கில் விழுந்து நொறுங்கிய எஃப்-16 விமானம்


ரிவர்சைட்: அமெரிக்காவில், பயிற்சியில் ஈடுபட்டிருந்த எஃப்-16 ரக போர் விமானம், கிடங்கு ஒன்றில் விழுந்து நொறுங்கியது. எனினும், அதிலிருந்த விமானி பாராசூட் மூலம் குதித்து, காயமின்றி உயிர் தப்பினார்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள விமானப் படை பயிற்சி மையத்திலிருந்து, வழக்கமான பயிற்சிக்காக வியாழக்கிழமை புறப்பட்ட விமானம், அந்த மையத்துக்கு அருகிலுள்ள கிடங்கு ஒன்றில் விழுந்து நொறுங்கியது. எனினும், அதிலிருந்த விமானி பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினார்.

இந்த விபத்தில், தரையிலிருந்த யாரும் காயமடைந்ததாக உடனடி தகவல் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com