ஆஸ்திரிய துணை பிரதமர் ராஜிநாமா: ரஷிய நிறுவனத்துடன் ரகசிய பேரம்

தேர்தலில் வெற்றி பெற தங்களுக்கு உதவினால், அரசு ஒப்பந்தங்களைப் பெற்றுத் தருவதாக மர்மப் பெண்ணுடன் ஆஸ்திரிய துணை
ஆஸ்திரிய துணை பிரதமர் ராஜிநாமா: ரஷிய நிறுவனத்துடன் ரகசிய பேரம்


வியன்னா: தேர்தலில் வெற்றி பெற தங்களுக்கு உதவினால், அரசு ஒப்பந்தங்களைப் பெற்றுத் தருவதாக மர்மப் பெண்ணுடன் ஆஸ்திரிய துணை பிரதமர் ஹீனஸ்-கிறிஸ்டியன் ஸ்டிராஷே பேரம் பேசி ரகசிய விடியோ வெளியானதையடுத்து, அவர் தனது பதவியை ராஜிநமா செய்தார்.

ஆஸ்திரிய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, ஸ்டிராஷேவும், அவரது சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் ஜோஹன் கியூரெனஸூம் , ரஷிய தொழிலதிபரின் உறவினர் என்று கூறிக் கொண்ட ஒரு பெண்ணுடன் கடந்த 2017-ஆம் ஆண்டு உரையாடும் விடியோ காட்சி, ஊடகங்களில் வெளியிடப்பட்டது.

அந்த விடியோவில், ஆஸ்திரியாவின் மிகப் பெரிய பத்திரிகையான "கிரோன் ஸீய்டங்'கை விலைக்கு வாங்க உதவுமாறு ஸ்டிராஷேவிடம் அந்தப் பெண் கோருவதும், அதற்கு பதிலாக எதிர்வரும் தேர்தலில் தங்களது கட்சி வெற்றி பெறுவதற்கு உதவ வேண்டுமென்று அந்த பெண்ணிடம் ஸ்டிராஷே கூறும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. மேலும், தேர்தலில் வெற்றி பெற்றால் அரசு ஒப்பந்தங்களை தருவதாக ஸ்டிராஷே உறுதியளிக்கும் காட்சியும் அந்த விடியோவில் இடம் பெற்றுள்ளது.

அந்த விடியோ வெளியானதைத் தொடர்ந்து கடும் சர்ச்சை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, தனது துணை பிரதமர் பதவியை ராஜிநாமா செய்வதாக ஹீனஸ்-கிறிஸ்டியன் ஸ்டிராஷே சனிக்கிழமை அறிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தன் மீது அரசியல் உள்நோக்கத்துடன் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும், அரசுக்கு ஏற்பட்டுள்ள அவப் பெயரை துடைப்பதற்காக பதவி விலகுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com