இந்தியாவுக்கான புதிய தூதரை நியமித்தது பாகிஸ்தான்

இந்தியாவின் புதிய தூதராக மொயினுல் ஹக்கை பாகிஸ்தான் அரசு திங்கள்கிழமை நியமித்தது.

இந்தியாவின் புதிய தூதராக மொயினுல் ஹக்கை பாகிஸ்தான் அரசு திங்கள்கிழமை நியமித்தது.
பாகிஸ்தானின் இந்தியத் தூதராக இருந்த சோஹைல் மெஹ்மூத், அந்நாட்டின் வெளியுறவுத் துறைச் செயலராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் வகித்த பதவி காலியாக இருந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் திங்கள்கிழமை உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. 
அதில், இந்தியா, சீனா, ஜப்பான் உள்பட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு புதிய தூதர்களை நியமிப்பதற்கு இம்ரான் கான் ஒப்புதல் அளித்தார். அதன்படி, புதிய இந்தியத் தூதராக மொயினுல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், தற்போது பிரான்ஸ் தூதராக உள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com