முகநூல் பயனாளர் தரவுகளை கோருவதில் இந்தியாவுக்கு 2-ஆவது இடம்

முகநூல் (ஃபேஸ்புக்) பயனாளர் தொடர்பான விவரங்களை கோருவதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது என அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் கய் ரோஸன் தெரிவித்துள்ளார்.
முகநூல் பயனாளர் தரவுகளை கோருவதில் இந்தியாவுக்கு 2-ஆவது இடம்

முகநூல் (ஃபேஸ்புக்) பயனாளர் தொடர்பான விவரங்களை கோருவதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது என அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் கய் ரோஸன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
ஃபேஸ்புக் நிறுவனம் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுவதில் உறுதிபூண்டுள்ளது. அதனை மெய்பிக்கும் வகையில், அரசு சார்பில் கோரப்படும் முகநூல் பயனாளர் தகவல்களை எவ்வித இடையூறும் இல்லாமல் நிறுவனம் வழங்கி வருகிறது. அந்த வகையில், 2018-ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நிறுவனத்திடமிருந்து முகநூல் பயனாளர் தரவுகளை கோருவதில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், பயனாளர் தரவுகளுக்கான அரசு கோரிக்கைகள் 1,03,815-லிருந்து  7 சதவீதம் அதிகரித்து 1,10,634-ஆனது.
ஒட்டுமொத்த கோரிக்கைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், அமெரிக்கா அதிக அளவில் முகநூல் பயனாளர் தரவுகளை கோரி முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில், இந்தியா, பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகள் உள்ளன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com