எவரெஸ்ட் சிகரத்தில் பலியானோர் எண்ணிக்கை 10-ஆக உயர்வு

எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயற்சித்து பலியானோர் எண்ணிக்கை கடந்த 2 வாரங்களில் 10-ஆக உயர்ந்துள்ளது.
எவரெஸ்ட் சிகரத்தில் ஏற நீண்டவரிசையில் காத்திருக்கும் மலையேற்ற வீரர்கள் (கோப்புப்படம்).
எவரெஸ்ட் சிகரத்தில் ஏற நீண்டவரிசையில் காத்திருக்கும் மலையேற்ற வீரர்கள் (கோப்புப்படம்).

எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயற்சித்து பலியானோர் எண்ணிக்கை கடந்த 2 வாரங்களில் 10-ஆக உயர்ந்துள்ளது.
உலகின் மிக உயரமான சிகரமாக நேபாளத்திலுள்ள எவரெஸ்ட் சிகரம் விளங்கி வருகிறது. அதில் ஏறி உலகின் உச்சியைத் தொட்டு சாதனை புரிவதற்குப் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். எவரெஸ்ட் சிகரத்தை அடைவதற்கு சாதகமான பருவம் இது என்பதால், அதன் உச்சியைத் தொடுவதற்குப் பலரும் போட்டிபோட்டு வருகின்றனர்.
இந்தப் பருவம் கூடிய விரைவில் முடிவடைய இருப்பதால், எவரெஸ்ட் சிகரத்தை அடைய முயற்சிப்பவர்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. முக்கியமாக, எவரெஸ்ட் சிகரத்தின் "மரணப் பகுதி'யில் மலையேற்ற வீரர்கள் நீண்டவரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், போதிய பிராணவாயு கைவசம் இல்லாததால், பல மலையேற்ற வீரர்கள் உயிரிழந்தனர்.
கடந்த வாரம் இந்தியாவைச் சேர்ந்த 4 வீரர்களும், அமெரிக்கா, ஆஸ்திரியா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த தலா ஒரு வீரரும் உயிரிழந்தனர். 
அயர்லாந்தைச் சேர்ந்த மற்றொரு வீரர் சிகரத்திலிருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்தார். இந்நிலையில், பிரிட்டன் மற்றும் அயர்லாந்தைச் சேர்ந்த மலையேற்ற வீரர்கள் இருவர் சனிக்கிழமை உயிரிழந்தனர்.
இதில், பிரிட்டனைச் சேர்ந்த 44 வயது மலையேற்ற வீரர், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து, திரும்பி வரும் வேளையில், சிகரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். உடனிருந்தவர்கள் அவரைக் காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. அயர்லாந்தைச் சேர்ந்த 56 வயது மலையேற்ற வீரர், எவரெஸ்ட் சிகரத்தை அடைய முடியாது என்று தெரிந்து, திரும்பி வர முடிவு செய்தார். ஆனால், வழியில் தன்னுடைய முகாமில் அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயற்சித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை கடந்த 2 வாரங்களில் 10-ஆக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com