சிறையில் கைதிகளுக்கிடையே மோதல்: 15 பேர் சாவு 

பிரேசில் வடக்குப்பகுதியில் உள்ள அமேஸோனாஸ் மாகாண சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே ஞாயிற்றுக்கிழமை திடீர் கலவரம் ஏற்பட்டது.
சிறையில் கைதிகளுக்கிடையே மோதல்: 15 பேர் சாவு 

பிரேசில் வடக்குப்பகுதியில் உள்ள அமேஸோனாஸ் மாகாண சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே ஞாயிற்றுக்கிழமை திடீர் கலவரம் ஏற்பட்டது.

காலை 11 மணியளவில் பார்வை நேரத்தின் போது இந்த வன்முறைச் சம்பவம் நடந்துள்ளது. இருப்பினும் சிறைக்காவலர்கள் துரிதமாக செயல்பட்டு கைதிகளுக்கு இடையிலான மோதலை உடனடியாக கட்டுப்படுத்தினர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதே சிறையில் கைதிகளுக்கு இடையே சுமார் 20 மணிநேரங்களாக நடைபெற்ற மோதலில் 56 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதிக சிறைக் கைதிகளைக் கொண்டதாக பிரேசில் சிறைச்சாலை திகழ்கிறது. இங்கு 2016-ஆம் ஆண்டு ஜூன் மாத கணக்கெடுப்பின் படி 7,26,712 கைதிகள் இருந்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com