Enable Javscript for better performance
பாகிஸ்தானில் வரலாற்றுச் சிறப்புமிக்க குருநானக் அரண்மனை தகர்ப்பு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    பாகிஸ்தானில் வரலாற்றுச் சிறப்புமிக்க குருநானக் அரண்மனை தகர்ப்பு

    By DIN  |   Published On : 28th May 2019 01:10 AM  |   Last Updated : 28th May 2019 01:10 AM  |  அ+அ அ-  |  

    gurunanak


    பாகிஸ்தானின் லாகூர் மாகாணத்தில் இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க குருநானக் அரண்மனையை மர்மநபர்கள் தகர்த்துள்ளனர்.
    லாகூரில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ள நரோவல் கிராமத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க குருநானக் அரண்மனை அமைந்துள்ளது. அந்த அரண்மனை, சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குருநானக் தேவின் நினைவாக சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் விலைமதிப்பு அதிகம்கொண்ட தேவதாரு மரக்கட்டைகளைப் பயன்படுத்தி கட்டப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பழங்கால செங்கல், சுண்ணாம்பு ஆகியவற்றைக் கொண்டு இந்த அரண்மனை கட்டப்பட்டது. 
    4 மாடிகளைக் கொண்ட இந்த அரண்மனையில் 16 அறைகள் உள்ளன. ஒவ்வோர் அறையிலும் 3 கதவுகளும், 4 ஜன்னல்களும் இருந்தன. இந்த மாளிகையைப் பார்வையிட இந்தியா உள்பட உலக நாடுகள் பலவற்றிலுமிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர். இந்நிலையில், இந்த அரண்மனையை மர்ம நபர்கள் தகர்த்துள்ளனர். அரண்மனையிலிருந்து 3 மாடிகள் இடிக்கப்பட்டு, அதிலிருந்த மரக்கதவுகள் மற்றும் ஜன்னல்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
    இச்சம்பவம் குறித்து மக்கள் சிலர் கூறியதாவது:
    இந்த அரண்மனையைக் காண பல்வேறு நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். ஒருமுறை கனடாவிலிருந்து வந்த பெண் ஒருவர், இந்த அரண்மனையைக் கண்டபின், ஏதோ புதையலைக் கண்டதுபோல் மகிழ்ச்சியடைந்தார். ஆனால், மர்ம நபர்கள் தற்போது இந்த அரண்மனையை அழித்துள்ளனர். இது குறித்து அரசு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்ட போதும், சம்பவ இடத்தைக் கூட அவர்கள் வந்து பார்க்கவில்லை. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு அரசு அதிகாரிகள் சிலர் உதவியுள்ளதுபோல் தெரிகிறது. பிரதமர் இம்ரான் கான் இந்த விவகாரத்தில் தலையிட்டு, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp