
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 19ஆவது மத்திய கமிட்டியின் 4ஆவது முழு அமர்வில் சீனாவின் தேசிய அமைப்பு முறை மற்றும் ஆட்சி முறை தொடர்பாக நிறைவேற்றிய ஆவணத்தில், சீனா ஊன்றி நிற்க வேண்டியது என்ன? தொடர்ந்து மேம்படுத்தி வளர்ச்சியுற செய்ய வேண்டியது என்ன? என்ற முக்கிய கேள்விகளுக்குப் பன்முகங்களிலும் பதிலளிக்கப்பட்டது.
மேலும் தேசிய பணிகளுக்கான கால அட்டவணையும் நெறிவரை படத்திட்டமும் குறித்து தெளிவுபடுத்தப்பட்டது. சீர்திருத்தத்தை மேலும் ஆழமாக்குவதில் பெரும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதை இது எடுத்துக்காட்டுகின்றது.
இவ்வாண்டு நவ சீனா நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவு ஆண்டாகும். மாபெரும் சாதனைகளைப் பெற்ற சீனாவிலிருந்து அதன் வெற்றிக்கான வழிமுறைகளைச் சர்வதேச சமூகம் அறிந்து கொள்ள விரும்புகின்றது. குறிப்பாக ஜனநாயகம் அல்லது வளர்ச்சி சிக்கலில் சிக்கியுள்ள சில மேலைமுதலாளித்துவ நாடுகள் மற்றும் வளரும் நாடுளைப்பொருத்த வரை இத்தகைய ஆய்வு மேலும் முக்கியத்துவம் வாய்ந்தது.