
கோப்புப் படம்
4ஆவது பிரிக்ஸ் நாடுகளின் ஊடகங்களுக்கிடையே உயர் நிலை கலந்தாய்வு அக்டோபர் 31-ஆம் நாள் பிரேசிலின் சாவ் பாரோ நகரில் நடைபெற்றது.
ரஷியாவின் ஸ்புட்னிக் செய்தி நிறுவனம், இந்தியாவின் தி ஹிந்து, சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் உள்ளிட்ட 55 முக்கிய ஊடகங்களைச் சேர்ந்த சுமார் 100 பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.
பிரிக்ஸ் நாடுகளது ஊடகங்களின் உயர் நிலை கலந்தாய்வு பற்றிய 2019-2020 செயல் திட்டத்தை பிரதிநிதிகள் கூட்டாக வெளியிட்டனர். மேலும், ஒத்துழைப்புத் தன்மை வாய்ந்த பரவலை ஆழமாக்குவதோடு, நியாயமாகவும் பன்முகங்களிலும் காலதாமதமின்றி செய்தி வெளியிடுவதன் மூலம், பிரிக்ஸ் நாடுகளின் மக்களுக்கிடையே புரிந்துணர்வையும் பரஸ்பர நம்பிக்கையையும் அதிகரிக்க வேண்டும் என்றும் அவர்கள் ஆலோசனை தெரிவித்தனர்.