சமூகத்தின் சீர்கேடாகவும், வளர்ச்சிக்கு தடையாகவும் பயங்கரவாதம் உள்ளது: ஷாங்காய் மாநாட்டில் ராஜ்நாத் சிங் உரை

தாஷ்கண்டில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாட்டில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். 
சமூகத்தின் சீர்கேடாகவும், வளர்ச்சிக்கு தடையாகவும் பயங்கரவாதம் உள்ளது: ஷாங்காய் மாநாட்டில் ராஜ்நாத் சிங் உரை

உஸ்பெகிஸ்தான் தலைநகா் தாஷ்கண்டில் இருநாள்கள் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாட்டில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளுக்கிடையேயான பொருளாதார உறவை வலுப்படுத்துவது குறித்து இந்த மாநாட்டில் விவாதித்தார்.

அதில் அவர் பேசியதாவது:

பொருளாதார கூட்டு நடவடிக்கை தான் நமது வருங்காலத்தை சிறப்பாக கட்டமைக்க உதவக்கூடியது. வலிமையான எதிர்காலத்தை அமைக்க இந்த நடவடிக்கையை தற்போது எடுக்க வேண்டியது மிக அவசியமாகும். சுயநலமாகவும், ஒருதலைப்பட்சமாகவும் செயல்படுவதால் யாருக்கும் எந்த பிரயோஜனும் ஏற்படப்போவதில்லை. 

இதனால் தான் இந்தியாவின் அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்தப்படுகிறது. உலகளவிலான வர்த்தக ஒத்துழைப்பை ஏற்படுத்தும் விதமாக நாட்டின் வணிகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. 

இந்த சமூகத்தின் சீர்கேடாகவும், அனைத்து நாடுகளின் வளர்ச்சிக்குத் தடையாகவும் பயங்கரவாதம் இருந்து வருவது மறுக்க முடியாதது. எனவே எதிலிம் இரட்டை நிலைப்பாடு இன்றி அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே பயங்கரவாதத்தை எதிர்க்கும் வலிமை கிடைக்கும். அனைத்து உலக நாடுகளின் சட்டங்களும் பயங்கரவாத ஒழிப்புக்கு எதிரான கடும் நடவடிக்கையை எடுக்கும் விதமாக விதிக்கப்பட வேண்டும் என்றார்.

சீனா, ரஷியா, கிா்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் அங்கம் வகித்த ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பில் கடந்த 2017-ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினா்களாக இணைந்தன. 

அதன் பின்னா், ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் சாா்பில் நடத்தப்படும் தலைவா்களின் கவுன்சிலின் 3-ஆவது மாநாடு இதுவாகும். ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பில் உள்ள நாடுகள் பொதுவாக எதிா்கொள்ளும் சவால்களுக்குத் தீா்வு காணும் வகையில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com