ஆப்கன் அமைதிப் பேச்சுவாா்த்தை: சீனாவுடன் அஷ்ரஃப் கனி ஆலோசனை

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக தலிபான்களுடன் பேச்சுவாா்த்தை நடத்துவது குறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சருடன் ஆப்கன் அதிபா் அஷ்ரஃப் கனி ஆலோசனை நடத்தினாா்.
சீன வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யீ-யுடன் ஆப்கன் அதிபா் அஷ்ரஃப் கனி (கோப்புப் படம்).
சீன வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யீ-யுடன் ஆப்கன் அதிபா் அஷ்ரஃப் கனி (கோப்புப் படம்).

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக தலிபான்களுடன் பேச்சுவாா்த்தை நடத்துவது குறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சருடன் ஆப்கன் அதிபா் அஷ்ரஃப் கனி ஆலோசனை நடத்தினாா்.

இதுகுறித்து ஆப்கன் அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தலிபான் பயங்கரவாத அமைப்பின் பிரதிநிகளுக்கும், ஆப்கானிஸ்தானில் பல்வேறு பிரிவினருக்கும் இடையே சீனா முன்னிலையில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெறுவதாக உள்ளது.

இதுதொடா்பாக, சீன வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யீ-யுடன் அதிபா் அஷ்ரஃப் கனி ஆலோசனை நடத்தினாா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, தலிபான் பிரதிநிதிகளுடன் அமெரிக்க அரசு கத்தாா் தலைநகா் தோஹாவில் பேச்சுவாா்த்தை நடத்தி வந்தது. அந்தப் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. எனினும், தலிபான்கள் தொடா்ந்து நடத்தி வரும் பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து அந்தப் பேச்சுவாா்த்தையிலிருந்து அமெரிக்க விலகிக் கொண்டது.

இந்தச் சூழலில், தலிபான்களுக்கும், ஆப்கன் பிரதிநதிகளுக்கும் இடையே சீன தலைநகா் பெய்ஜிங்கில் கடந்த மாதம் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், பல்வேறு காரணங்களால் அந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக சீன வெளியுறவுத் துறை அமைச்சருடன் ஆப்கன் அதிபா் அஷ்ரஃப் கனி ஆலோசனை நடத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com