ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் இந்தியாவின் பிரச்னைகளுக்கு கலந்தாலோசனை மூலம் தீர்வு: சீனத் தலைமையமைச்சர்

ஆர்சிஇபி ஒப்பந்தம் குறித்து , இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது எதிர்நோக்கிய பிரச்னைகளை தொடர்ந்து கலந்தாலோசனை மூலம் தீர்க்க சீனா விரும்புவதாக அந்நாட்டு தலைமையமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் இந்தியாவின் பிரச்னைகளுக்கு கலந்தாலோசனை மூலம் தீர்வு: சீனத் தலைமையமைச்சர்

ஆர்சிஇபி ஒப்பந்தம் குறித்து பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது எதிர்நோக்கிய பிரச்னைகளை தொடர்ந்து கலந்தாலோசனை மூலம் தீர்க்க சீனா விரும்புவதாக அந்நாட்டு தலைமையமைச்சர் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்து நேரப்படி நவம்பர் 4ஆம் நாளிரவு  பாங்காங் நகரில் சீனத் தலைமையமைச்சர் லீக்கெச்சியாங் பிரதேச பன்முகப் பொருளாதாரக் கூட்டாளி உறவு (ஆர்சிஇபி) உடன்படிக்கையின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஆசியானின் 10 உறுப்பு நாடுகள் மற்றும் தென் கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா முதலிய நாடுகளின் தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் லீக்கெச்சியாங் உரை நிகழ்த்துகையில், "7 ஆண்டுகளாகத் தொடர்ந்த பேச்சுவார்த்தை தற்போது முடிந்துள்ளது. உலகில் மிக அதிக மக்கள் தொகை, உறுப்பு நாடுகள் மற்றும் மிகப் பெரிய உள்ளார்ந்த ஆற்றல் கொண்ட கிழக்காசிய தாராள மண்டலக் கட்டுமானம் மாபெரும் முன்னேற்றம் அடைந்துள்ளதை இது காட்டுகிறது. சீனா, பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது எதிர்நோக்கிய பிரச்சினைகளை தொடர்ந்து கலந்தாலோசனை மூலம் தீர்க்க விரும்புகிறது. இந்தியா வெகுவிரைவில் இந்த உடன்படிக்கையில் சேர்வதைச் சீனா வரவேற்கிறது" என்று தெரிவித்தார்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com