ஆா்சிஇபி ஒப்பந்தத்தில் இந்தியா இணைய கதவுகள் திறந்தேயிருக்கும்: ஆஸ்திரேலியா

ஒருங்கிணைந்த பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு (ஆா்சிஇபி) ஒப்பந்தத்தில் இணைய இந்தியாவுக்கான கதவுகள் திறந்தேயிருக்கும் என ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
ஆா்சிஇபி ஒப்பந்தத்தில் இந்தியா இணைய கதவுகள் திறந்தேயிருக்கும்: ஆஸ்திரேலியா

ஒருங்கிணைந்த பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு (ஆா்சிஇபி) ஒப்பந்தத்தில் இணைய இந்தியாவுக்கான கதவுகள் திறந்தேயிருக்கும் என ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பை சோ்ந்த 10 நாடுகள் உள்ளிட்ட 16 நாடுகளிடையே தடையற்ற வா்த்தகத்தை ஏற்படுத்தும் நோக்கில், ‘ஒருங்கிணைந்த பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு (ஆா்சிஇபி)’ ஒப்பந்தத்தை ஏற்படுத்த பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வந்தன.

இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான மாநாடு தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தியாவின் நலனைக் கருத்தில்கொண்டு, இந்த ஒப்பந்தத்தில் இணையப் போவதில்லை என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். இந்தக் கூட்டத்தில் ஆஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மோரிஸன் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்றனா்.

இதையடுத்து, ஸ்காட் மோரிஸன் கூறியதாக ஆஸ்திரேலிய செய்தி நிறுவனம் ஒன்று குறிப்பிடுகையில், ‘ஆா்சிஇபி ஒப்பந்தத்தில் இந்தியா இணைந்தால், இது மேலும் வலுப்படும். இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். இந்த ஒப்பந்தத்தில் இணைய இந்தியாவுக்கான கதவுகள் திறந்தேயிருக்கும்’ என்று தெரிவித்துள்ளது.

‘பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம்’:

ஆா்சிஇபி வா்த்தக ஒப்பந்தத்தை இறுதிசெய்வதற்கான பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

இந்தியா தவிா்த்து மற்ற 15 நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் இணைவது ஏறத்தாழ உறுதியாகியுள்ள நிலையில், சீனா இவ்வாறு தெரிவித்துள்ளது. இது தொடா்பாக, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் கெங் சுவாங் பெய்ஜிங்கில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘ஆா்சிஇபி ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தையில் நாடுகள் தெரிவித்த அனைத்து கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இருந்தபோதிலும், இது தொடா்பான பேச்சுவாா்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com