உலகப் பொருளாதாரத்தைக் கூட்டாக உருவாக்க சீனா முயற்சி:ஷிச்சின்பிங் பேச்சு

திறப்பு மற்றும் பகிர்வுக்கான உலகப் பொருளாதாரத்தைக் கூட்டாக உருவாக்க வேண்டும். வளர்ச்சிச் சாதனைகள் மேலதிக நாடுகள் மற்றும் மக்களுக்கு
உலகப் பொருளாதாரத்தைக் கூட்டாக உருவாக்க சீனா முயற்சி:ஷிச்சின்பிங் பேச்சு

சீனாவின் ஷாங்காய் மாநகரில் சா்வதேச இறக்குமதிக் கண்காட்சி இன்று செவ்வாய்க்கிழமை(நவ.5) தொடங்கியது. 6 நாள்களுக்கு நடைபெறும் இக்கண்காட்சியை சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது: திறப்பு மற்றும் பகிர்வுக்கான உலகப் பொருளாதாரத்தைக் கூட்டாக உருவாக்க வேண்டும். வளர்ச்சிச் சாதனைகள் மேலதிக நாடுகள் மற்றும் மக்களுக்கு பயன் அளிக்க செய்ய வேண்டும். சந்தைத் திறப்பு அளவை தொடர்ந்து விரிவாக்கி, பல்வேறு நாடுகளின் தரமிக்க பொருட்கள் மற்றும் சேவையின் இறக்குமதி அளவை அதிகரிக்க சீனா முனைப்புடன் செயல்படும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

மேலும், சீனா தொழில் புரிவதற்கான சாதகமான சூழலை தொடர்ச்சியாக மேம்படுத்தி, வெளிநாட்டு முலீடுகளுக்கு சந்தை நுழைவுக்கட்டுப்பாட்டைத் தளர்க்கும் என்றும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொள்ளும் 15 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்தியாவுடன் சேர்ந்து, கம்போடியா, செக்குடியரசு, பிரான்ஸ், கிரேக்கம், இத்தாலி, ஜமைக்கா, ஜோர்டான், கஜகஸ்தான், மலேசியா, பெரு, ரஷியா, தாய்லாந்து, உஸ்பெகிஸ்தான், ஜாம்பியா ஆகிய நாடுகளும் சிறப்பு அழைபாளர்களாக இதில் கலந்துகொண்டுள்ளன.

சீனச் சந்தையில் இந்திய மருந்துப்பொருள்கள், தகவல்தொழில்நுட்ப சேவைகள், வேளாண்பொருள்கள் ஆகியவற்றுக்கு அதிக தேவை இருப்பதால் இந்தக்கண்காட்சியில் இந்தியா அவற்றை முன்னிலைப்படுத்தியுள்ளது. 

150க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த 3000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 2ஆவது கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த கொள்முதலாளர்கள், தொழில்முறைபார்வையாளர்கள் என மொத்தம் 500000 பேர் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com