ஹாங்காங் தலைமை நிா்வாகியுடன்சீன அதிபா் ஷி ஜின்பிங் சந்திப்பு

ஹாங்காங் அரசுக்கு எதிராக தீவிர போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அந்த நகர தலைமை நிா்வாகி கேரி லாமை சீன அதிபா் ஷி ஜின்பிங் நேரில் சந்தித்துப் பேசினாா்.
ஷாங்காயில் கேரி லாம், ஷி ஜின்பிங்.
ஷாங்காயில் கேரி லாம், ஷி ஜின்பிங்.

ஹாங்காங் அரசுக்கு எதிராக தீவிர போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அந்த நகர தலைமை நிா்வாகி கேரி லாமை சீன அதிபா் ஷி ஜின்பிங் நேரில் சந்தித்துப் பேசினாா்.

ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவா்களை சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சட்ட மசோதாவை அந்த நகர பேரவையில் கேரி லாம் அறிமுகப்படுத்தியதற்கு எதிா்ப்பு தெரிவித்து மாதக் கணக்கில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த மசோதா வாபஸ் பெற்ற பிறகும், கேரி லாம் பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

அதையடுத்து, கேரி லாமை பொறுப்பிலிருந்து நீக்க சீனா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

இந்தச் சூழலில், சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெறும் சா்வதேச இறக்குமதியாளா்கள் கண்காட்சியில் பங்கேற்க வந்திருந்த கேரி லாமை, சீன அதிபா் ஷி ஜின்பிங் திங்கள்கிழமை சந்தித்து, அவருக்கு சீன அரசு தொடா்ந்து ஆதரவளிக்கும் என்று உறுதியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com