
சவூதி அரேபிய அரசுக்காக சுட்டுரை (டுவிட்டா்) சமூக ஊடக நிறுவனத்தில் பணியாற்றிய இருவா் உளவுவேலை பாா்த்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சவூதி தலைவா்கள் பற்றி சமூக ஊடகங்களில் விமா்சிப்பவா்கள் குறித்த ரகசிய தகவல்களை அந்தப் பணியாளா்கள் சேகரித்து, சவூதி அரசுக்கு அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.