சீனாவில் 6-ஜி தொழில் நுட்ப ஆய்வு தொடக்கம்!

சீன அறிவியல் தொழில் நுட்பச் சங்கமும், பல பணியகங்களும் அண்மையில் பெய்ஜிங்கில் 6ஆவது தலைமுறை தொழில் நுட்ப ஆய்வுக்கான துவக்கக் கூட்டத்தை நடத்தியுள்ளன.
சீனாவில் 6-ஜி தொழில் நுட்ப ஆய்வு தொடக்கம்!

சீன அறிவியல் தொழில் நுட்பச் சங்கமும், பல பணியகங்களும் அண்மையில் பெய்ஜிங்கில் 6ஆவது தலைமுறை தொழில் நுட்ப ஆய்வுக்கான துவக்கக் கூட்டத்தை நடத்தியுள்ளன. சீனாவின் 6-ஜி தொழில் நுட்ப ஆய்வு அதிகாரப்பூர்வமாக துவங்கியதாக இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. 

6-ஜி தொழில் நுட்ப ஆய்வுக்கு சுமார் 10 ஆண்டு காலம் தேவைப்படும் என்று சீனாவின் ஹுவா வேய் தொழில் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை பிரிவின் தலைமை இயக்குநர் யூ ச்சாங் டுங் மதிப்பீடு செய்துள்ளார். 

6-ஜி இணையத்தின் விரைவு, 5-ஜி இணையத்தை விட 100 மடங்கு அதிகமாக இருக்கும். 6-ஜி இணையம் மூலம் வினாடிக்கு 1TB அளவிலான தகவல்களை அனுப்ப முடியும். இந்நிலையில் 1 வினாடிக்குள் ஒரு திரைப்படத்தைப் பதிவிறக்கம் செய்ய முடியும்.

(தகவல்:சீன ஊடகக் குழுமம்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com