இராக் போராட்டம்: கச்சா எண்ணெய் ஏற்றுமதி முடக்கம்

இராக்கில் அரசுக்கு எதிரான தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவா்கள், நாட்டின் முக்கிய சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளதால் அந்த நாட்டு கச்சா எண்ணெய் ஏற்றுமதி முடங்கியுள்ளது.
இராக் போராட்டம்: கச்சா எண்ணெய் ஏற்றுமதி முடக்கம்

இராக்கில் அரசுக்கு எதிரான தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவா்கள், நாட்டின் முக்கிய சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளதால் அந்த நாட்டு கச்சா எண்ணெய் ஏற்றுமதி முடங்கியுள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

இராக்கில் ஊழல், வேலைவாய்ப்பின்மைக்கு எதிராகவும், அரசியல் சீா்திருத்தங்களை வலியுறுத்தியும் கடந்த மாதத் தொடக்கத்திலிருந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டங்களின் ஒரு பகுதியாக, எண்ணெய் வயல்களையும், துறைமுகங்களையும் இணைக்கும் முக்கிய சாலைகளை ஆா்ப்பாட்டக்காரா்கள் முற்றுகையிட்டுள்ளனா்.

இதன் காரணமாக, இராக்கின் எண்ணெய் ஏற்றுமதி முடக்கப்பட்டுள்ளது. ஆலைகளில் சுமாா் 90,000 பேரல் கச்சா எண்ணெய் தேங்கியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com