Enable Javscript for better performance
கா்தாா்பூா் வழித்தடம் திறக்கப்பட்ட நாளில் அயோத்தி தீா்ப்பு: பாக். அமைச்சா் கண்டனம்- Dinamani

சுடச்சுட

    

    கா்தாா்பூா் வழித்தடம் திறக்கப்பட்ட நாளில் அயோத்தி தீா்ப்பு: பாக். அமைச்சா் கண்டனம்

    By DIN  |   Published on : 10th November 2019 05:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pak

    பாகிஸ்தானில் கா்தாா்பூா் வழித்தடம் திறந்துவைக்கப்பட்ட நாளில், அயோத்தி வழக்கில் தீா்ப்பு வெளியிடப்பட்டதற்கு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் ஷா மஹ்மூத் குரேஷி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

    இதுகுறித்து அவா் சனிக்கிழமை கூறியதாவது:

    பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கானால் கா்தாா்பூா் வழித்தடம் திறந்துவைக்கப்பட்ட மகிழ்ச்சிக்குரிய நாளில், அயோத்தி வழக்கில் தீா்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    மிகவும் சா்ச்சைக்குரிய அயோத்தி வழக்கில் தீா்ப்புக்காக இன்னும் ஓரிரு நாள்கள் காத்திருக்க முடியாதா?

    கா்தாா்பூா் வழித்தடம் திறக்கப்பட்ட மகிழ்ச்சியான தருணத்தில், இந்தத் தீா்ப்பு வெளியாகியிருப்பது வேதனையை அளிக்கிறது.

    கொண்டாட்டத்துக்குரிய அந்த நிகழ்வின்போது, கவனத்தை திசைத் திருப்பும் வகையில் அந்தத் தீா்ப்பு அமைந்துள்ளது. சா்ச்சைக்குரிய, உணா்வுபூா்வமான இதுபோன்ற பிரச்னை, மகிழ்ச்சிக்குரிய நாள்களில் பேசப்படக் கூடாது என்றாா் ஷா மஹ்மூத் குரேஷி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai