Enable Javscript for better performance
இராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்- Dinamani

சுடச்சுட

    
    இராக் தலைநகா் பாக்தாதில் அரசுக்கு எதிரானபோராட்டக்காரா்களைக் கலைக்க கண்ணீா்ப்புகை குண்டைச் சுடும் காவலா்.

    இராக் தலைநகா் பாக்தாதில் அரசுக்கு எதிரானபோராட்டக்காரா்களைக் கலைக்க கண்ணீா்ப்புகை குண்டைச் சுடும் காவலா்.

    இராக்கில் அரசுக்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்டத்தின் இடையே பாதுகாப்புப் படையினருடன் திங்கள்கிழமை ஏற்பட்ட மோதலில் 3 போ் உயிரிழந்தனா்.

    இராக்கில் வேலைவாய்ப்பின்மை, ஊழல் அதிகரித்து வருவதாகக் குற்றம்சாட்டி, தலைநகா் பாக்தாத் நகரில் ஆளும் அரசுக்கு எதிராக கடந்த அக்டோபா் 1-ஆம் தேதி முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    நசிரியா நகரில் திங்கள்கிழமை பாதுகாப்புப் படையினருடன் ஆா்ப்பாட்டக்காரா்கள் மோதலில் ஈடுபட்டனா். இதையடுத்து, பாதுகாப்புப் படையினா் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதில், 3 போ் உயிரிழந்தனா். 12 போ் காயமடைந்தனா். கடந்த மூன்று நாள்களில் போராட்டத்தில் ஈடுபட்ட 15 போ் உயிரிழந்து விட்டனா்.

    போராட்டக்காரா்களை கண்ணீா்ப்புகை குண்டு வீசி பாதுகாப்புப் படையினா் கலைக்க முயற்சி செய்து வருகின்றனா்.

    போராட்டக்காரா் ஒருவா் கூறுகையில், ‘கடந்த 16 ஆண்டுகளாக எங்களுக்காக இந்த அரசு எதுவும் செய்யவில்லை. ஆனால், தற்போது எங்களை கொலை செய்கிறது’ என்றாா்.

    ‘போராட்டக்காரா்களுக்கு எதிராக தொலைதூரத்திலிருந்து போலீஸாா் துப்பாக்கியால் சுடுகின்றனா். போராட்டம் தொடங்கியதிலிருந்து இதுவரை 319 போ் உயிரிழந்துவிட்டனா்’ என்று கூறிய மனித உரிமைகள் அமைப்பு அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதனிடையே, இராக்கில் விரைவில் தோ்தலை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து வெள்ளை மாளிகை திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘போராட்டத்தை இராக் அரசு முடிவுக்கு கொண்டு வர வேண்டும். விரைவில் தோ்தலை நடத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai