ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் கின்னஸ் சாதனை: அப்படி என்னதான் செய்து விட்டார் இவர்?

ஜப்பானைச் சேர்ந்த வீடியோ கேம் இயக்குநர் ஒருவர் ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் குறிப்பிடத்தக்க கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
ஹிடியோ கொஜிமா
ஹிடியோ கொஜிமா

டோக்கியோ: ஜப்பானைச் சேர்ந்த வீடியோ கேம் இயக்குநர் ஒருவர் ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் குறிப்பிடத்தக்க கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

வீடியோ கேம்கள் என்றாலே எப்போதுமே குழந்தைகளுக்கு கொண்டாட்டம் தான். ஜப்பானில் "Death Stranding" என்ற ஒரு ப்ளே ஸ்டேஷன்  வீடியோ கேம் அப்படி மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும். ஹிடியோ கொஜிமா என்னும்  ஜப்பானிய இளைஞர்தான் அந்த விடியோ கேமின் இயக்குநராவார். இவர் சமீபத்தில் ஒரு கின்னஸ் சாதனை படைத்தார்.

குழந்தைகளுக்கான கேமை உருவாக்கும் இவர் உலகம் முழுவதும் பலரது இதயத்தில் இடம் பிடித்துள்ளார். இவரது ட்விட்டர் கணக்கை 23 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். இதன் மூலம் உலகளவில் அதிகம் பேரால் ட்விட்டரில் பின் தொடரப்படும் கேம் இயக்குநர் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது. அதுபோல் அவரது இன்ஸ்டாகிராம் கணக்கை 930,000 பேர் பின் தொடர்கின்றனர்.

இதன்காரணமாக அவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்று உலகப்புகழ் பெற்றுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com