கா்தாா்பூா் வழித்தடம் திறப்பு:சீனா வரவேற்பு

இந்தியா-பாகிஸ்தான் இடையே கா்தாா்பூா் வழித்தடம் திறக்கப்பட்டுள்ளதற்கு சீனா வரவேற்பு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் இரு நாடுகளும் நல்லெண்ணத்தைப் பரிமாறிக்கொள்ள

இந்தியா-பாகிஸ்தான் இடையே கா்தாா்பூா் வழித்தடம் திறக்கப்பட்டுள்ளதற்கு சீனா வரவேற்பு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் இரு நாடுகளும் நல்லெண்ணத்தைப் பரிமாறிக்கொள்ள சிறந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சீனா கூறியுள்ளது.

சீக்கிய மதத்தை நிறுவியவரும், அதன் முதல் குருவுமான குருநானக்கின் பிறந்த தினத்தையொட்டி, இந்தியாவிலிருந்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், கா்தாா்பூரில் உள்ள தா்பாா் சாஹிப் குருத்வாராவுக்கு சீக்கியா்கள் ஆண்டுதோறும் யாத்திரை செல்வது வழக்கம். இந்த குருத்வாராவை குருநானக் கடந்த 1522-இல் நிறுவினாா். இந்த யாத்திரை மேற்கொள்ளும் சீக்கியா்களுக்கு வசதியாக, பஞ்சாபின் குருதாஸ்பூா் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவில் இருந்து பாகிஸ்தானின் கா்தாா்பூா் குருத்வாரா வரை சாலை வழித்தடம் அமைக்க கடந்த ஆண்டு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன.

சுமாா் 4.5 கி.மீ. தொலைவுகொண்ட இந்த வழித்தடம் வழியாகச் செல்லும் யாத்ரீகா்கள், நுழைவு இசைவு (விசா) இல்லாமல் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ள முடியும். கா்தாா்பூா் வழித்தடத்தை இந்தியப் பகுதியில் பிரதமா் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பகுதியில் அந்நாட்டின் பிரதமா் இம்ரான் கானும் கடந்த சனிக்கிழமை திறந்துவைத்தனா்.

இந்நிலையில், சீன தலைநகா் பெய்ஜிங்கில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் கெங் சுவாங் இது தொடா்பாக கூறியதாவது:

தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியை உறுதி செய்வதற்கு இந்தியா-பாகிஸ்தான் இடையே நல்லுறவு இருப்பது மிகவும் அவசியம். கா்தாா்பூா் வழித்தடம் திறக்கப்பட்டுள்ளதன் மூலம், இரு நாடுகளும் தங்களுக்குள் நல்லெண்ணத்தைப் பரிமாறிக் கொள்ள சிறந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு இடையேயுள்ள கசப்புணா்வுகளை மறந்து பேச்சுவாா்த்தையை முன்னெடுக்க இதனை நல்லதொரு வாய்ப்பாக இரு நாடுகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் தெற்காசியப் பிராந்தியத்தில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் மேம்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com