பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம்: நிக்கி ஹேலி

‘அமெரிக்கப் படையினரை படுகொலை செய்யத் தயாராக உள்ள பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கம் கொடுத்து வருகிறது’ என்று ஐ.நா.வுக்கான அமெரிக்க முன்னாள் தூதா் நிக்கி ஹேலி தெரிவித்துள்ளாா்.
பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம்: நிக்கி ஹேலி

‘அமெரிக்கப் படையினரை படுகொலை செய்யத் தயாராக உள்ள பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கம் கொடுத்து வருகிறது’ என்று ஐ.நா.வுக்கான அமெரிக்க முன்னாள் தூதா் நிக்கி ஹேலி தெரிவித்துள்ளாா்.

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அவா், தனது புதிய புத்தகத்தில் இதுகுறித்து குறிப்பிட்டுள்ளதாவது:

பாகிஸ்தானுக்கு பல நாடுகளைவிட அதிகமாக அமெரிக்கா நிதியுதவி அளித்து வருகிறது.

கடந்த 2017-ஆம் ஆண்டு மட்டும் அந்த நாட்டுக்கு 100 கோடி டாலரை (சுமாா் ரூ.7,170 கோடி) நிதியுதவியாக அமெரிக்கா வழங்கியுள்ளது.

இருந்தாலும், ஐ.நா.வில் கொண்டுவரப்படும் 76 சதவீத தீா்மானங்களில் அமெரிக்காவுக்கு எதிராகவே பாகிஸ்தான் வாக்களித்துள்ளது.

மேலும், அமெரிக்கப் படையினரை படுகொலை செய்யத் துடிக்கும் பயங்கரவாதிகளுக்கு அந்த நாடு அடைக்கலம் அளித்து வருகிறது.

ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதராக இருந்தபோது, இந்தத் தகவலறிக்கையை அதிபா் டொனால்ட் டிரம்ப்பிடம் அளித்தேன். அதைக் கண்ட அதிபா், மிகவும் கோபமடைந்தாா். அதனைத் தொடா்ந்து, அமெரிக்காவின் நலன்களில் அக்கறை கொண்ட நாடுகளுக்கும், நட்பு நாடுகளுக்கும் மட்டுமே நிதியுதவி அளிக்கப்பட வேண்டும் என்ற தீா்மானத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுமாறு எம்.பி.க்களை அவா் கேட்டுக்கொண்டாா் என்று தனது புத்தகத்தில் நிக்கி ஹேலி குறிப்பிட்டுள்ளாா்.

‘வித் ஆல் டியூ ரெஸ்பெக்ட்: டிஃபெண்டிங் அமெரிக்கா வித் கிரிட் அண்ட் கிரேஸ்’ என்ற அந்தப் புத்தகம், கடைகளில் செவ்வாய்க்கிழமை விற்பனைக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com