நவாஸ் ஷெரீஃபை பழிவாங்க வேண்டிய அவசியமில்லை: இம்ரான் கான்
By DIN | Published on : 16th November 2019 11:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

முன்னாள் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபை பழிவாங்க வேண்டிய அவசியமில்லை என அந்நாட்டின் தற்போதைய பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். முன்னதாக, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நவாஸ், லண்டன் சென்று சிகிச்சை பெறுவதை இம்ரான் வேண்டுமென்றே தடுப்பதாக அவரது மகள் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், இம்ரான் கான் கூறியதாவது,
உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நவாஸ், சிகிச்சை பெற்று முழுமையாக குணமாக மனிதநேய அடிப்படையில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன. இதில் அவரது வெளிநாட்டுப் பயணம் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது. மற்றபடி அவர்கள் தரப்பில் இதற்கு உச்ச நீதிமன்றம் சென்று உரிய உத்தரவைப் பெற்றால் யாரும் தடுக்கப்போவதில்லை.
இதில் நவாஸின் குடும்பம்தான் வேண்டுமென்றே அரசியல் செய்கிறது. நாளுக்குநாள் நவாஸின் உடல்நிலை மோசமடைந்து வருகிறது. எனவே அவரை வெளிநாடு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்துக்கொள்கிறேன். இதில் அரசியல் செய்ய இப்போது நேரமில்லை. அரசியலை விட ஆரோக்கியம் முக்கியமானது என்று தெரிவித்தார்.