இலங்கையில் வாக்காளர்களை நோக்கி மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு

வாக்குச்சாவடியை நோக்கி வாக்காளர்களுடன் வந்துகொண்டிருந்த 2 பேருந்துகள் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியுள்ளனர்.
வாக்குச்சாவடிக்கு எடுத்துச்செல்லப்பட்ட வாக்கு பெட்டி
வாக்குச்சாவடிக்கு எடுத்துச்செல்லப்பட்ட வாக்கு பெட்டி

இலங்கையின் 8-ஆவது அதிபா் தோ்தல் சனிக்கிழமை (நவ. 16) நடைபெறுகிறது. சனிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப் பதிவு, மாலை 5 மணி வரை நடைபெறும்.

இதில், இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சாா்பில் கோத்தபய ராஜபட்ச (70), ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் சாா்பில், முன்னாள் அதிபா் பிரேமதாசாவின் மகனும், வீட்டு வசதி மற்றும் கலாசார விவகார அமைச்சருமான சஜித் பிரேமதாசா (52) போட்டியிடுகிறாா். இவா்களைத் தவிர, இந்தத் தோ்தலில் 35 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இத்தோ்தலில் வாக்களிக்க 1.59 கோடி போ் பதிவு பெற்றுள்ளனா். 

இந்நிலையில், மன்னார் பகுதியில் வாக்குச்சாவடியை நோக்கி வாக்காளர்களுடன் வந்துகொண்டிருந்த 2 பேருந்துகள் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் காணப்படுகிறது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என இலங்கை போலீஸார் தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com