Enable Javscript for better performance
பதவி விலகினார் சஜித் பிரேமதாசா: கோத்தபய ராஜபட்சவுக்கு பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    பதவி விலகினார் சஜித் பிரேமதாசா: கோத்தபய ராஜபட்சவுக்கு பாராட்டு

    By DIN  |   Published on : 17th November 2019 12:27 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Sajith_Premadasa

     

    இலங்கையின் 8-ஆவது அதிபா் தோ்தலில் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபட்ச வெற்றிபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா கூறியதாவது:

    இலங்கையின் புதிய அதிபராக வெற்றிபெற்றுள்ள இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபட்சவைப் பாராட்டுகிறேன், மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன் என்று தனது தோல்வியை ஒப்புக்கொள்ளும் விதமாக தெரிவித்துள்ளார்.

    மேலும், இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மக்கள் சேவையில் தொடர்ந்து ஈடுபடவுள்ளதாகவும் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai