பிறரின் துயரில் லாபம் பெற முயலும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்!

ஹாங்காங்கில் நடைபெற்று வரும் வன்முறை குற்றச் செயல்கள் அண்மைக் காலமாகத் தீவிரமாகி வருகிறன. இதுவரையில், நூற்றுக்கணக்கான பேர் இதில் காயமடைந்தனர். அப்பாவி மக்களில் ஒருவர் உயிரிழந்தார்.
பிறரின் துயரில் லாபம் பெற முயலும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்!

ஹாங்காங்கில் நடைபெற்று வரும் வன்முறை குற்றச் செயல்கள் அண்மைக் காலமாகத் தீவிரமாகி வருகிறன. இதுவரையில், நூற்றுக்கணக்கான பேர் இதில் காயமடைந்தனர். அப்பாவி மக்களில் ஒருவர் உயிரிழந்தார். 

ஆனால், இந்த மோசமான உண்மையை வேண்டுமென்றே புறக்கணித்து, ஹாங்காங் பிரச்சினையைச் சீனா அமைதியாகத் தீர்க்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் போம்பியோ அண்மையில் விருப்பம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வால் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிக்கும் செயல், பிரான்ஸில் மஞ்சள் ஆடை இயக்கம், பிரிட்டனில் லண்டன் கலவரம் ஆகியவை நிகழ்ந்தபோது, அந்த நாடுகளின் காவற் துறையினர் கடுமையாகச் செயல்பட்டனர். அப்போதெல்லாம் அந்நாடுகளின் அரசியல்வாதிகள் அமைதியான முறையில் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று ஏன் வேண்டுகோள் விடுக்கவில்லை? 

நடைமுறையில் இத்தகைய தவறான வேண்டுகோளில் இரட்டை வரையறை காணப்பட்டுள்ளது. சில அரசியல்வாதிகள் எதிரும் புதிருமாக பதிலளித்து, மனித குலத்தின் அடிப்படை எல்லையைத் தாண்டியுள்ளனர். சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடும் இத்தகைய செயல்கள், ஹாங்காங் விவகாரத்தைப் பயன்படுத்தி சீனாவுக்கு நிர்பந்தம் திணித்து, சீனாவில் கலவரத்தை ஏற்படுத்தும் அவர்களின் தீய சூழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளன.  

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com