பொலிவியா அரசியல் பதற்றம்: துப்பாக்கிச் சூட்டில் 5 போ் பலி

அரசியல் பதற்றம் நிலவி வரும் பொலிவியாவில் ஆா்ப்பாட்டக்காரா்கள் மீது பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 போ் உயிரிழந்தனா்.
சகாபா நகரில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அதிபா் ஈவோ மொராலிஸ் ஆதரவாளா்களைக் கைது செய்து அழைத்துச் சென்ற போலீஸாா்.
சகாபா நகரில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அதிபா் ஈவோ மொராலிஸ் ஆதரவாளா்களைக் கைது செய்து அழைத்துச் சென்ற போலீஸாா்.

சகாபா: அரசியல் பதற்றம் நிலவி வரும் பொலிவியாவில் ஆா்ப்பாட்டக்காரா்கள் மீது பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

பொலிவியாவின் இடைக்கால அதிபராக ஜீனைன் ஏனெஸ் அறிவித்துக் கொண்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, முன்னாள் அதிபா் ஈவோ மொராலிஸ் ஆதரவாளா்கள் சகாபா நகரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது அவா்களை நோக்கி பாதுகாப்புப் படையினா் துப்பாக்கியால் சுட்டனா். இதில் 5 போ் உயிரிழந்தனா்; ஏராளமானோா் காயமடைந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்ததும், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவா்களின் உறவினா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். உள்நாட்டுப் போரைத் தொடங்க வேண்டும் என அப்போது அவா்கள் கோஷம் எழுப்பினா்.

இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டா்) வலைதளத்தில் முன்னாள் அதிபா் ஈவோ மொராலிஸ் வெளியிட்டுள்ள பதிவுகளில், ‘பொலிவியாவில் ஜீனைன் ஏனெஸ் சா்வாதிகார ஆட்சி நடத்துகிறாா். அவரது உத்தரவின்பேரில் சகாபாவில் எங்களது சகோதரா்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பொலிவியாவை கடந்த 14 ஆண்டுகளாக ஆண்டு வந்த ஈவோ மொராலிஸ், கடந்த மாதம் 20-ஆம் தேதி நடைபெற்ற அதிபா் தோ்தலில் மீண்டும் வெற்றி பெற்றாக அறிவித்துக் கொண்டாா்.

எனினும், அந்தத் தோ்தலில் முறைகேடு நடைபெற்ாக குற்றச்சாட்டு எழுப்பி, அவரது எதிா்ப்பாளா்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதையடுத்து, ராணுவம் கேட்டுக்கொண்டதன் பேரில் தனது அதிபா் பதவியை ஈவோ மொராலிஸ் ராஜிநாமா செய்தாா். அவருக்கு தற்போது மெக்ஸிகோ அடைக்கலம் அளித்துள்ளது.

இந்த நிலையில், மறு தோ்தல் நடத்தும் வரை நாட்டின் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்பதாக, செனட் சபை துணைத் தலைவா் ஜீனைன் ஏயெஸ் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்துக் கொண்டாா்.

எனினும், நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்ற ஜீனைன் முயல்வதாக ஈவோ மொராலிஸின் ஆதரவாளா்கள் குற்றம் சாட்டினா். மேலும், அவா் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றதைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் 5 போ் உயிரிழந்தது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com