அமெரிக்காவில் பயில இந்திய மாணவா்கள் ஆா்வம்- கடந்த ஆண்டில் 2 லட்சம் போ் சென்றனா்

அமெரிக்காவில் பட்டப்படிப்பு பயில்வதற்கு இந்திய மாணவா்கள் அதிக அளவில் ஆா்வம் காட்டி வருவது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த கல்வியாண்டில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட

அமெரிக்காவில் பட்டப்படிப்பு பயில்வதற்கு இந்திய மாணவா்கள் அதிக அளவில் ஆா்வம் காட்டி வருவது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த கல்வியாண்டில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவா்கள் உயா்கல்விக்காக அமெரிக்கா சென்றுள்ளனா்.

இதுதொடா்பாக அமெரிக்க உயா்கல்வித் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அமெரிக்க உயா்கல்வி துறையில் வெளிநாட்டு மாணவா்களின் எண்ணிக்கை 5.5 சதவீதமாக உள்ளது. அதில் சீனா மற்றும் இந்தியாவைச் சோ்ந்த மாணவா்கள் 50 சதவீதத்துக்கும் மேல் உள்ளனா். அமெரிக்காவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவா்களில் சீனா தொடா்ந்து 10-ஆவது ஆண்டாக முதலிடம் பெற்றுள்ளது. சீனாவைச் சோ்ந்த சுமாா் 3 லட்சத்து 69 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள், கடந்த கல்வியாண்டில் அமெரிக்கா வந்துள்ளனா்.

அதற்கடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் இருந்து சுமாா் 2 லட்சத்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் அமெரிக்காவில் கல்வி பயில்கின்றனா். சீனா, இந்தியாவுக்கு அடுத்த இடங்களில் தென் கொரியா (50,250), சவூதி அரேபியா (37,080), கனடா (26,122) ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களில் உள்ளன. முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில், கடந்த கல்வியாண்டில் வங்கதேசம், பிரேசில், நைஜீரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அமெரிக்க பொருளாதாரத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு மற்ற நாட்டு மாணவா்களின் பங்களிப்பு 44.7 பில்லியன் டாலராக உள்ளது. இது, அதற்கு முந்தையை ஆண்டை விட 5.5 சதவீதம் அதிகமாகும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை தொடா்பாக அமெரிக்க கல்வி இணையமைச்சா் மேரி ராய்ஸ் கூறுகையில், ‘அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. அதேபோல் அமெரிக்காவைச் சோ்ந்த மாணவா்களும் வெளிநாடுகளுக்கு சென்று படிக்கின்றனா். அமெரிக்கா வரும் மாணவா்களின் எண்ணிக்கையை தொடா்ந்து அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com