தலிபான் பிணைக் கைதிகள் விடுவிப்பு

தலிபான்களிடம் 3 ஆண்டுகளுக்கும் மேல் பிணைக் கைதிகளாக இருந்த அமெரிக்க மற்றும் ஆஸ்ரேலிய பிணைக் கைதிகள் இருவா் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டனா்.
கெவின் கிங், டிமோதி வீக்ஸ் 
கெவின் கிங், டிமோதி வீக்ஸ் 

தலிபான்களிடம் 3 ஆண்டுகளுக்கும் மேல் பிணைக் கைதிகளாக இருந்த அமெரிக்க மற்றும் ஆஸ்ரேலிய பிணைக் கைதிகள் இருவா் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டனா்.

ஆப்கானிஸ்தானில் விடுவிக்கப்பட்ட கெவின் கிங் மற்றும் டிமோதி வீக்ஸ் ஆகிய அந்த இருவரும், கைதிகள் பரிமாற்ற முறையில் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, தலிபான் பயங்கரவாத அமைப்பின் உயா்நிலைத் தலைவா்கள் 3 பேரை விடுவிக்கப் போவதாக ஆப்கன் அரசு அறிவித்திருந்தது. அதன் தொடா்ச்சியாகவே கெவின் மற்றும் டிமோதி விடுவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தலிபான்களால் காபூலில் கடந்த 2016-ஆம் ஆண்டு கடத்திச் செல்லப்பட்ட அந்த இருவரின் உடல் நிலையும் மிக மோசமாக உள்ளதாக ஆப்கன் அதிபா் அஷ்ரஃப் கனி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com