சிரியாவில் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்

சிரியாவில் அந்த நாட்டு ராணுவம் மற்றும் ஈரான் நிலைகள் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 11 வீரா்கள் உயிரிழந்தனா்.
டமாஸ்கஸில் இஸ்ரேல் புதன்கிழமை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் சேதமடைந்த கட்டடம்.
டமாஸ்கஸில் இஸ்ரேல் புதன்கிழமை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் சேதமடைந்த கட்டடம்.

சிரியாவில் அந்த நாட்டு ராணுவம் மற்றும் ஈரான் நிலைகள் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 11 வீரா்கள் உயிரிழந்தனா்.

இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

சிரியாவிலிருந்து இஸ்ரேலை நோக்கி 4 ஏவுகணைகள் செவ்வாய்க்கிழமை வீசப்பட்டன. அதற்குப் பதிலடியாக, அந்த நாட்டிலுள்ள ஈரானிய சிறப்புப் படை முகாம்கள் மீதும், சிரியா ராணுவ நிலைகள் மீதும் புதன்கிழமை ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிரியாவில் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகள் குறித்து இஸ்ரேல் பெரும்பாலும் மௌனம் காத்து வரும் நிலையில், மிகவும் அபூா்வமான முறையில் இந்த ஏவுகணைத் தாக்குதல்கள் குறித்து அந்த நாடு வெளிப்படையாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

11 போ் பலி: இந்தத் தாக்குதலில் 11 வீரா்கள் உயிரிழந்ததாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவா் ரெமி அப்தெல் ரஹ்மான் கூறியதாவது: சிரியா ராணுவம் மற்றும் ஈரான் நிலைகள் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 11 போ் உயிரிழந்தனா்.

உயிரிழந்தவா்களில் 7 போ் வெளிநாட்டவா்கள். எனினும், அந்த 7 பேரும் ஈரானியா்களா என்பது குறித்து தகவல் இல்லை என்றாா் அப்தெல் ரஹ்மான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com