இலங்கை முழுவதும் ஆயுதம் ஏந்திய ராணுவப் பாதுகாப்பு: அவசர சட்டம் பிறப்பிப்பு

இலங்கையில் தமிழர் பகுதி உட்பட பல்வேறு இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் ரோந்து செல்லும் வகையில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை முழுவதும் ஆயுதம் ஏந்திய ராணுவப் பாதுகாப்பு: அவசர சட்டம் பிறப்பிப்பு

இலங்கையில் தமிழர் பகுதி உட்பட பல்வேறு இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் ரோந்து செல்லும் வகையில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பாதுகாப்பு மற்றும் அமைதியை பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.  இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச இதற்கான அரசாணையை பிறப்பித்துள்ளார்.

நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்திருக்கும் இந்த அவசரச் சட்டத்தின் மூலம், இலங்கையில் இனி துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியை மேற்கொள்வார்கள். 

இது புதிய நடைமுறை அல்ல என்றும் ஏற்கனவே இது நடைமுறையில் இருந்திருப்பதாகவும் பாதுகாப்புத் துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

நவம்பர் 27ம் தேதி விடுதலைப் புலிகளின் மாவீரர் தினம் கடைபிடிக்கப்பட உள்ள நிலையில், இலங்கையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதேப்போல, ஈஸ்டர் பண்டிகையின் போது நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்துக்குப் பிறகு 4 மாதங்கள் இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com